நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Monday, October 24, 2011

என்ன கொடுமை அழகிரி

வரும் தேர்தலில் தி.மு.க. 234 தொகுதிகளிலும் ஜெயிக்கும். அதன் பின்னர் அ.தி.மு.க. என்ற கட்சியே இருக்காது”

இந்த பேட்டியை கொடுத்தவர் வேறு யாருமில்லை. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனும் மத்திய உரத்துறை அமைச்சருமான மு.க.அழகிரி தான். இதே ஆண்டு, ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் அழகிரியின் ராஜபாட்டை பேட்டி இது. எங்கு சென்றாலும் அவர் அளிக்கும் பேட்டி இதுதான்.
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், தி.மு.க.வுக்கு வந்த சோதனைகளை விட, தி.மு.க. தொண்டனுக்கு வந்த சோதனையை விட தமிழ்நாட்டில் அதிகமாக பாதிக்கப்பட்ட தி.மு.க. பிரமுகர் அழகிரியாகத்தான் இருப்பார். கட்சியின் தலைவரின் மூத்த மகன். மத்திய அரசின் உரத்துறை அமைச்சர். தி.மு.க.வின் தென் மண்டல அமைப்புச் செயலாளர் என்ற பதவியை அலங்கரித்துக் கொண்டிருக்கும் அழகிரி,  தான் வசிக்கும் வார்டில் தி.மு.க. தோற்றுவிட்டது கூட செய்தியல்ல.
அந்த வார்டில் தி.மு.க. நான்காவது இடத்தை பிடித்திருக்கிறதாம். என்ன கொடுமை அழகிரி இது?

'அது' கிடைக்காமல் போச்சே

2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி தொடர்பாக, கைது செய்யப்பட்டு, டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழி, ஜாமின் கோரி இன்று தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை மதியம் 2 மணிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணையில் நவம்பர் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

கூடங்குளம் அணுமின் நிலையம் தேவையா?

 
வேலை கொடுத்திருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது என்று சொல்வோருக்கு இந்த பதில் - பிரச்சனைகளும் போராட்டங்களும் வந்தபிறகு இதுபோன்ற உறுதிமொழிகள் தந்து போராட்டத்தை திசை திருப்ப முயற்ச்சிக்காமல் இருந்திருப்பார்களா என்ன? நடந்தது, அதையும் மக்கள் தூக்கி எரிந்து விட்டார்கள் என்பதை நான் தெரிவித்துக்கொள்ள ஆசைப் படுகிறேன். பத்துவருடமாக அங்கு வேலை செய்துவந்த வெளிமாநில அன்பர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பேனும் நிகழ்ந்ததுண்டா? வேலைதான் காரணம் என்றால்? இத்தனை வருடம் இத்தனை வெளிமாநிலத்தவர் அங்கு வேளையில் இருக்கமுடிந்தது எப்படி?

திடீர் போராட்டம் சந்தேகத்தை தூண்டுகிறது என்று நினைப்போருக்கு - இந்தியாவை திரும்பிப் பார்க்கவைக்கும் ஒரு மக்கள் அறவழிப் போராட்டம் நடக்கிறது, 1500 கோடி ரூபாய் அணு உலையை மூட சொல்கிறார்கள் என்றால் இவ்வளவு நேரம் தமிழக உளவுத்துறைக்கும், இந்திய உளவுத்துறைக்கும் இந்த சந்தேகம் வராமல் இருக்கும்? அப்படி இருந்தும் இதுவரை அந்தகாரணம் வெளிவராதது ஏன்? அரசாங்கம் இந்த போராட்டத்திற்கு மதிப்பளிப்பது ஏன்?
ஏன் என்றால்? இந்தப் போராட்டம் சுயனலத்திர்க்கோ, அல்லது காசுக்காகவோ, நிலத்திர்க்காகவோ, வேலைக்காகவோ, அரசியளுக்காகவோ செய்யப் படுவதில்லை. வாழ்வாதாரம் போய்விடுமோ என்ற ஒரு இனத்தின் பயம், உழைக்கும் வர்க்கத்தின் பயம், சந்ததிகளைப் பற்றிய பயம், பயம், பயம் மட்டுமே காரணம்.

பாதுகாப்பு உத்தரவாதம் தந்தால் ஒப்புக்கொள்ளவேண்டிதானே என்று சொல்பவர்களுக்கு - இல்ல நான் தெரியாமத்தான் கேட்கிறேன், ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பானை விட நாம் தொழில் நுட்பத்தில் அவ்வளவு பெரிய அப்பாடக்கரா? இல்ல அவ்வளவு பெரிய அப்பாடக்கரா என்ன? அவர்களே விழி பிதுங்கி நிற்கும் போது நாம் என்ன செய்ய முடியும். அப்படி தவறி எதாவது நடந்துவிட்டால், ஒரு அறிக்கை விட்டுவிட்டும் வருத்தம் தெரிவித்துவிட்டும் போய் விடுவார்கள் அப்போ நீங்கபோய் கொண்டு வருவீர்களா இந்த உயிர்களை?

சரி சுனாமி இனிமேல் இந்தியாவில் வராது என்று உங்களால் உத்திரவாதம் தரமுடியுமா?.

பதுக்கப்பனது என்று நினைக்கும் நீங்கள் அங்கு வாழ்த்தயாரா?

இந்தியாவில் இரண்டு அணுமின் நிலையம் தமிழ் நாட்டில் மட்டும் தான் அது ஏன்? கல்பாக்கம் ஒன்று போதுமே நமக்கு.

2000 மெகாவாட் மின்சக்தி தயாரிக்க பயன்படுத்தப் படும் ரியாக்டரின் சக்தி என்னவென்று தெரியுமா? அதில் பயன்படுத்தப் படும் யுரோநியத்தின் அளவு தெரியுமா? இல்லை அடுத்த வருடம் மேலும் இரண்டு ரியாக்டர்கள் அதே கூடங்குளத்தில் நிறுவ இருக்கிறார்களே அது தெரியுமா? அப்படி நிறுவினால் மொத்தம் மூன்று ரியாக்டர்களின் அளவி நினைத்துப் பாருங்கள். அதன் கழிவுகளை நினைத்து பாருங்கள்.

சமீபத்தில் பிரான்சில் ஏற்ப்பட்ட அணுஉலை கழிவு பிரச்சனை என்னவென்று கொஞ்சம் இணையத்தில் தேடிப் பாருங்கள்

அசம்பாவிதம் ஏதும் நிகழ்ந்தால் தென் தமிழ்நாடு முழுதும் புல்பூண்டு இல்லாமல் போய் விடும். இன்று காற்றுவாங்க மின்விசிரிக்கு, குளிரூட்டிக்கு மின்சாரம் இல்லை என்று கவலைப்படும் நீங்கள் காற்றுவாங்க கறியில்லாமல் போய்விடும். அனைத்தும் உருகி ஓடிவிடும்.

(பத்து வருடமாக இல்லாமல் திடீர் போராட்டம் நடத்தி) தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு இந்திய வளர்ச்சி பாதைக்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள் என்று சொல்பவர்களுக்கு -
அப்படி இருந்திருந்தால் இத்தனை நாள் கல்பாக்கம் இயங்கி இருக்காது, அது போல் கூடங்குளம் 2000 மெகாவாட் தமிழகத்திற்குத்தான் என்று கனவு காணாதீர்கள், அதில் வெறும் 976 மெகாவாட் தான் அதும் போராட்டம் ஆரம்பித்தபிறகு அறிவித்தது. அதற்க்கு முன் அதைவிட மிக்க மிக குறைவு.

அணுசக்தி பயன்படுத்தாத நாடுகள் இருளில் மூழ்கிப் போய் விட்டனவா? இல்லை ஒட்டுமொத்த இந்தியாவின் மின்சாரத் தேவையில் இந்த பத்து அணுமின் நிலையங்களின் பங்களிப்பு 4% தான் என்பதும் தெரியாதா?

அப்படி என்றால் இன்னும் எத்தனை எத்தனை அணுமின் நிலையங்கள் கட்டப் போகிறீர்கள்? அனைத்தையும் பாதுகாக்க என்ன என்ன நடவடிக்கைகள். போர் வந்து இந்த நிலையங்கள் தாக்கப்பட்டால் விளைவு?

உங்கள் வீட்டு மின்சார வசதிக்காகவும், நீங்கள் சீரியல், கிரிக்கெட் பார்ப்பதற்காகவும் எத்தனை மக்கள் உயிரை பணையம் வைக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள்?
சரி அவர்கள் அங்கிருந்து காலி செய்தால் என்ன? என்று கேட்டால் -
தமிழ் நாடு மொத்தத்தையும் காலி செய்துவிட்டு அணுமின் நிலையங்களாக நிறுவி விடலாமா?

காவிரி, முல்லை பெரியாறு, கிருஷ்ணா நதிநீர், ஒக்கேனைகல் குடிநீர்த்திட்டம், செய்து சமுத்திரத் திட்டம், தமிழர் மீனவர் பிரச்சனை இவற்றை தீர்த்துவைத்தால் பிறகு யோசிக்கலாம்?

இந்தப் பிரச்சனைகள் தீர்க்கப் பட்டாலே போதும் தமிழ்நாடு வளமையோடும் செழிப்போடும் இருக்கும், இவற்றை கேட்க வக்கு இருக்கா நமக்கு? இல்லை என்றால் இந்த பிரச்சனைகளைப் பற்றி நாம் பேசக் கூடாது. வேடிக்கைப் பாருங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை

இந்தியன், ஜனநாயகம், தேசப் பற்று, சிந்தனையாளர் என்று நினைத்து நம் மக்களின் போராட்டத்திற்கு நீங்களே தடையாய் இருக்காதீர்கள். ஒற்றுமை என்பதை நிருபிக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழன் இருக்கிறான். இல்லையென்றால் தமிழினம் என்பதை கல்வெட்டில் மட்டும் காணவேண்டிய நிலைமை வந்துவிடும்.
__________________
நன்றி- த.நிவாஸ்

அண்ணி வேடத்தில் - திரிஷா வேதனை

 
 
 திரிஷாவை தெலுங்கு படமொன்றில் அண்ணி வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்து இருப்பதாக வதந்தி பரவியது. பட வாய்ப்புகள் இல்லாததால் அண்ணி கேரக்ட்டருக்கு இறங்கி வந்துள்ளதாகவும் கூறப்பட்டது. அப்படத்தில் வெங்கடேஷ், மகேஷ்பாபு என இரு நாயகர்கள் நடிக்கின்றனர்.

வெங்கடேஷ்பாபுவின் தம்பியாக மகேஷ்பாபு நடிக்கிறார். வெங்கடேஷ் மனைவி வேடத்தில் திரிஷா நடிக்கிறார். அதாவது மகேஷ்பாபுவின் அண்ணியாக வருகிறார் என்று செய்திகள் வெளியாயின.

இது பற்றி திரிஷாவிடம் கேட்ட போது வருத்தப்பட்டார். அவர் கூறியதாவது:-

மகேஷ்பாபு, வெங்கடேஷ் இணைந்து நடிக்கும் படத்துக்கு நான் ஒப்பந்த மாகவில்லை. எனவே மகேஷ்பாபுவின் அண்ணியாக நடிக்கிறேன் என்ற கேள்வியே எழவில்லை. விஷால் ஜோடியாக நடிக்கும் சமரன் படத்தில் எனக்கு நல்ல கேரக்டர் அமைந்துள்ளது. திறமையை காட்டுவதற்கு இப்படத்தில் நிறைய வாய்ப்புகள் உள்ளன.

எல்லாமே அம்மா தான்

பெயருக்குத்தான் பிரதமராக இருக்கிறார் மன்மோகன் சிங். மற்றபடி முடிவெடுப்பது உள்ளிட்ட அனைத்தையும் சோனியா காந்திதான் செய்கிறார் என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார்.

38 நாள் யாத்திரை மேற்கொண்டுள்ள அத்வானி, ஒரிசா மாநிலம் பர்கார் என்ற இடத்தில் பேசினார். அப்போது அவர் கூறுகையில், டாக்டர் மன்மோகன் சிங்தான் நான் கண்ட பிரதமர்களிலேயே மிகவும் பலவீனமானவர். பெயருக்குத்தான் பிரதமராக இருக்கிறார் மன்மோகன் சிங். மற்றபடி அனைத்து முடிவுகளையும் சோனியா காந்திதான் எடுக்கிறார்.

மன்மோகன் சிங் அரசைப் பற்றி நான் பேச ஆரம்பித்தால் மன்மோகன் சிங்கின் 'செயல்திறன்'தான் எனக்கு முதலில் நினைவுக்கு வருகிறது. அதிகாரப்பூர்வமாக அவர் பிரதமராக இருந்தாலும், அவர் எந்த முடிவையும் எடுப்பதில்லை என்றே நான் கருதுகிறேன். அனைத்து முடிவுகளையும் காங்கிரஸ் தலைவர்தான் எடுக்கிறார் என்றார் அத்வானி.

கடந்த வாரம்தான் நாட்டிலேயே மிகவும் பலவீனமான பிரதமர் மன்மோகன் சிங் என்று கடுமையாக சாடியிருந்தார் அத்வானி. இதற்குப் பதிலளித்த பிரதமர், அத்வானி தனது பேச்சின்போது கடுமையாக இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

இந்த நிலையில் பெயருக்குத்தான் பிரதமராக இருக்கிறார் மன்மோகன், முடிவுகளை சோனியாதான் எடுக்கிறார் என்று அத்வானி சாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்



நூறு வயதுக்கு மேலும் வாழணுமா?!


நூறு வயதுவரை வாழ்வதற்கு யாருக்குத் தான் ஆசை இருக்காது. ஆனால் அதற்கான நடைமுறைகளை செயற்படுத்துவதில் தான் பலர் தோற்றுப் போகின்றனர்.

ஆயுளை அதிகரிக்க கடினமான சில விஷயங்களை செயற்படுத்தி ஓர் இரு தினங்களிலேயே அவற்றை கைவிட்டவர்களே அதிகம்.

ஆனால் இங்கு குறிப்பிடும் ஏழு நடைமுறைக் குறிப்புக்களையும் கடைப்பிடித்து பாருங்கள். உங்கள் உடல் நிலையில் மாற்றம் ஏற்படும்.

எடையைக்குறைத்தல்

புகைத்தலைத் தவிர்த்தல்

உணவில் கொழுப்புச் சத்தைக் குறைத்தல்

ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளல்

நீரிழிவு கட்டுப்பாடு

சுறுசுறுப்பான வாழ்க்கை

பழங்களை அதிகம் உண்ணுதல்

அன்றாட வாழ்க்கையில் பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்வதன் மூலம் இதனை சாதிக்கலாம் என வைத்திய நிபுணர்களும் தெரிவித்துள்ளனர்.

மகளுக்காக காத்திருக்கிறார்

2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி தொடர்பாக, கைது செய்யப்பட்டு, டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழி, ஜாமின் கோரி, இன்று மனு தாக்கல் செய்வதால், டில்லி சென்றுள்ள தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று அங்கேயே தங்கினார்.

ஸ்பெக்ட்ரம் வழக்கில், குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு விட்டதால், ஜாமின் கோரி கனிமொழி, இன்று மனு தாக்கல் செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது. அப்படி தாக்கல் செய்யப்படும் போது, பெண் என்ற வகையில், அவருக்கு உடனே ஜாமின் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் நம்பப்படுகிறது.அவர் ஜாமினை சி.பி.ஐ., எதிர்க்காது என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்தக் காரணங்களுக்காகவே, கருணாநிதி நேற்று சென்னை திரும்பவில்லை என்றும், மகளுக்கு ஜாமின் கிடைத்ததும், அவருடன் சேர்ந்து சென்னை திரும்புவதற்காக, நேற்று டில்லியிலேயே தங்கி விட்டார் என்றும், தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்தன.அதே சமயம், மகளைத் திகார் சிறையில் சந்தித்த போது, அதிக அளவு இருவரும் உணர்ச்சிவயப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

சி.பி.ஐ., வலையில் தயாநிதி

சன் டி.டி.எச்.,க்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததில், முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் தயாநிதியின் பங்கு குறித்து விசாரணை நடத்தவுள்ளதாக, சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுதொடர்பாக அந்த வட்டாரங்கள் கூறியதாவது:ஏர்செல் நிறுவனம், மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்கப்பட்ட விவகாரத்தில், மத்திய தொலைத்தொடர்பு துறை முன்னாள் அமைச்சர் தயாநிதி மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது. தயாநிதியின் வீட்டுக்கு 300 டெலிபோன் இணைப்புகள் வழங்கப்பட்டது தொடர்பான விவகாரம் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.இந்நிலையில், "2ஜி' ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்த வழக்கில் தொடர்புடைய, சில தொலைத் தொடர்பு நிறுவனங்கள், டி.டி.எச்., சேவையில் ஈடுபட்டுள்ளதை, சி.பி.ஐ., கண்டுபிடித்தது. இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக, டி.டி.எச்., நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பான ஆவணங்களை, தொலைத் தொடர்பு துறையிடம், சி.பி.ஐ., கேட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து, டிஷ் "டிவி' இந்தியா லிட்., ரிலையன்ஸ் பிக் "டிவி' பிரைவேட் லிட்., பார்தி மல்டி மீடியா லிட்., பாரதி பிசினஸ் சேனல் பிரைவேட் லிட்., தூர்தர்ஷன், சன் டி.டி.எச்., பிரைவேட் லிட்., டாடா ஸ்கை லிட்., போன்ற நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பான ஆவணங்களை பெற்ற சி.பி.ஐ., அவற்றை ஆய்வு செய்தது. இதன்பின், சன் டி.டி.எச்., தொடர்பான ஆவணங்களை தவிர, மற்ற ஆவணங்கள், தொலைத் தொடர்பு துறையிடம் திரும்ப அளிக்கப்பட்டு விட்டன.சன் டி.டி.எச்.,க்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முன்னாள் தொலைத் தொடர்பு துறை அமைச்சர் தயாநிதியின் பங்கு குறித்து விசாரிக்க, சி.பி.ஐ., திட்டமிட்டுள்ளது.இவ்வாறு சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவித்தன.