நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Saturday, December 17, 2011

முல்லைப் பெரியாறு ஒரே தீர்வு




முல்லைப் பெரியாறு விவகாரத்தில் இரு மாநில மக்களும் வன்முறையில் இறங்குவது முட்டாள்தனமானது. தமிழக மக்கள் கேரளாவில் நுழைந்து அணையை கைப்பற்றுவது போல் பேரணி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி கேரளாவுக்குள் நுழைந்தால் உயிரிழப்பு தான் நடக்குமே தவிர உருப்படியாக நடக்கப் போவது ஒன்றுமில்லை என்பதை இங்கே கண்டிப்பாக பதிவு செய்ய விரும்புகிறேன்.

கேரள அரசாங்கத்தை முல்லைப் பெரியாறு பிரச்னையில் தமிழகத்தோடு ஒத்துழைக்க வேண்டுமென்றால் எனக்கு தெரிந்த ஒரே ஒரு தீர்வு இதுதான்...

1. கேரளாவைச் சார்ந்த ஸ்தாபனங்கள் நகைகடை, துணிக்கடை, ஹோட்டல் உள்ளிட்ட எந்த நிறுவனத்திலும் தமிழர்கள் நுழைய மாட்டோம் என்று தீர்மானம் போட்டு கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக கேரள டீக்கடைகளையும் புறக்கணிக்க வேண்டும். அதாவது கல் அடித்ததும் கடையை அடித்தலும் கூடாது.

2. தமிழர்களின் வாழ்வாதாரமான விவசாயத்துக்கு தண்ணீர் தரவில்லை என்றால், நமது வாழ்க்கையும் வீணாகி போய்விட வேண்டும் என்று கேரள மக்கள் யோசிக்க வேண்டும்.

3. கேரளாவில் எந்த சுற்றுலா தளத்திற்கும் தமிழ்நாட்டிலிருந்து செல்லக் கூடாது என்று அறிவித்து வாகனங்கள் இயக்குவதையும் தடைசெய்ய வேண்டும்.

4. .சபரிமலைக்குச் செல்வதைத் தவிர்த்து தமிழ்நாட்டிலேயே ஏதாவதொரு இடத்தில் ஐயப்பனுக்கு கோயில் கட்டி மற்ற மாநில மக்களை அங்கே வரவழைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

இப்படியொரு சமுதாய புறக்கணிப்பு போராட்டத்தை தமிழர்கள் இரண்டு மாதம் நடத்தினாலே போதும். முதலில் அந்த மக்கள் உணர்வார்கள். பிறகு, அந்த மக்களே அரசாங்கத்துக்கு உணர்த்துவார்கள்.

அதைவிடுத்து இரு தரப்பும் அடித்துக் கொண்டு சாக வேண்டும் என்று நினைப்பதும், அதை அரசியல் கட்சிகளும் சில திடீர் தலைவர்களும் தூண்டிவிடுவதும் சரியானதல்ல.



நன்றி தமிழ் லீடர்