நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Wednesday, March 7, 2012

மனைவியை சமாளிக்க சில டிப்ஸ்.


மகளிர் தின சிறப்பு பதிவு

குடும்பத்தில் கணவன், மனைவி இடையே சண்டை, தகராறு ஏற்படுவது சகஜமாகிவிட்டது. கணவன் மனைவி இடையே ஏற்படும் சண்டைகளால் குடும்பங்களே பிரிந்து விடுகின்றன. முடிவில் மனைவி தான் கோபம் கொண்டவளாக இருந்தாள் என்று பெரும்பாலான கணவன்கள் குறைக் கூறுகின்றனர். குடும்பத்தில் மனைவிகள் கோபம் அடைய, கணவன்களும் பல நேரங்களில் காரணமாகி விடுகின்றனர் என்பது அவர்களுக்கு புரிவதில்லை.

உங்கள் கோபக்கார மனைவியை சமாளிக்க : ஒரு சில டிப்ஸ்

உங்கள் இல்லத்தரசியை பார்க்கும் போது புன்னகை செய்ய மறக்காதீர்கள். நீங்கள் புன்னகை செய்தாலே அடுத்த நொடியில் கோபத்தை மறந்து விடுவார்கள்.(நம்புங்க)
மனைவி செய்யும் சிறு உதவிகளுக்கும் அன்புடன் நன்றி கூறலாம். வாயினால் தெரிவிக்க கூடாது. அதனை சற்று கொஞ்சலாகவும் மனைவியை அணைப்பதன் வழியாகவும் நன்றி கூறலாம். ஏதேனும் சிறு தவறு ஏற்படின் தவறுகளுக்காக உடனே மன்னிப்பு கேட்டு கொள்ளுங்கள். இதன்மூலம் மனைவியிடம் கோபம் நீடிப்பதை தவிர்க்க முடியும்.

வேலைக்கு செல்லும் மனைவியாக இருந்தால், வேலை முடிந்து வரும் போது அவர்களின் அனுபவங்களை கேட்டு அறிந்து கொள்ளுங்கள். அதேபோல நீங்களும் உங்கள் அனுபவங்களை, அவரிடம் பகிர்ந்து கொள்ள மறக்காதீர்கள். அவ்வாறு பகிர்ந்து கொள்வதன் மூலம் தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும்.

முக்கிய வேலைகளில் ஈடுபடும் போது அன்பாய் பேச வேண்டுமே தவிர தொந்தரவு செய்வது போல மனைவியிடம் பேசி கொண்டே இருக்காதீர்கள். இதனால் மனைவி கோபமடைந்து, உங்களை திட்ட நேரிடும். இதனால் 2 பேரும் டென்ஷன் ஆக வாய்ப்பு அதிகம்.

உங்கள் மனைவி தெரியாமல் செய்யும் சிறு சிறு தவறுகளைக் கூட சுட்டிக்காட்டி வாய்க்கு வந்தபடி திட்டாதீர்கள். அவர்கள் தவறு செய்து இருப்பின் நிதானமாக தவறை எடுத்து கூறுங்கள்.

மற்றவர்கள் முன் மனைவியை கேவலமாக பேசுவது, திட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதால், மனைவி தனிமையாக இருப்பதாக உணர்ந்து தாய்வீ்ட்டு நினைப்பு வந்துவிடலாம். எனவே வீட்டில் இருக்கும் போது மனைவிக்கு சிறு சிறு உதவிகள் செய்வதன் மூலம், இருவருக்கும் இடையே உறவும் பலப்படும், அன்பும் பெருகும். கோபம் இருந்த இடம் தெரியாமல் போகும்.


கணவனும் மனைவியும் பேசும் போது பிடிவாதமாக பேசாமல், விட்டுக் கொடுத்து பேசுங்கள். மனைவியும் தனது கருத்தை தெரிவிக்க வாய்ப்பு அளிக்க தவறாதீர்கள். மனைவி செய்தவைகள் குறிப்பாக சமையல் உள்ளிட்டவைகளை பார்த்து குறை கண்டுபிடிக்காதீர்கள். நன்றாக இருப்பதாக கூறிவிட்டு, மாற்றத்தை சாதூர்யமாக தெரிவிக்கலாம்.

மனைவி விரும்பி ஏதாவது பொருட்களை கேட்கும் போது, பணம் இருந்தால் வாங்கி கொடுக்கலாம். இல்லாவி்ட்டால் பணம் இல்லை என்றோ அல்லது குறிப்பிட்ட பொருள் இப்போது தேவையில்லை என்றோ சாந்தமாக மனைவியிடம் எடுத்து கூறலாம்.

வேலைக்கு செல்லாத மனைவியாக இருந்தால், ஏதேனும் சில நாட்கள வீட்டிற்கு வரும்போது மல்லிப்பூ அல்லது அவர்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி வந்து அவர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழத்துங்கள்.
நேரம் கிடைக்கும் போது மனைவியை வெளி இடங்களுக்கு கூட்டி செல்லலாம்.

மனைவி செய்த தவறுகளை மனதில் வைத்து கொண்டு, அதனை குத்தி காட்டி பேச கூடாது. மேலும் சம்பந்தமே இல்லாமல் மனைவியின் பெற்றோரையும், குடும்பத்தையும் திட்ட கூடாது. இதனால் மனைவியின் மனதில் வெறுப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.


 மனசாட்சி: சண்டை ஏற்படின் முடிந்தமட்டும் சமாதான  கொடியை பறக்கவிட காத்திருக்க வேண்டுமே தவிர, மேலும் சண்டையை வளர்க்க கூடாது. அன்பை வெளிப்படுத்தினால் மகிழ்ச்சியோடு வாழலாம்...

விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு


டீ.வியில் பவர் சோப்பு விளம்பரத்துக்கு வரும்.. இந்த புள்ள எம்புட்டு அம்சம்..னு, அழகுன்..னு மனசுக்குள்ளார  சொல்லிகோணும் அத வுட்டுட்டு வெளிபடையாக... அதுவும் மனைவியிடமே சொன்னால் கம்பெனி பொறுப்பாகாது.

22 comments:

  1. அய்யோ ரொம்ப சிம்பிளா சொல்லிட்டு போய்ட்டீங்க!!!

    அருமை பதிவு

    ReplyDelete
    Replies
    1. சிம்ப்ளாவா...?!

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  2. இது எல்லாம் பண்ணியும் ...வேலைக்கு ஆகலைனா????

    ReplyDelete
    Replies
    1. அட பண்ணித்தான் பாருங்களேன்..

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  3. நல்ல பதிவு தலைவா

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. Replies
    1. ஹி ஹி ஹி ஹி...

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்.

      Delete
  6. ரொம்ப கரெக்டா சொல்லிட்டீங்க. உங்க வீட்டுல பூரிக்கட்டைக்கும், தோசை திருப்பிக்கு வேலை இல்லாம பண்ணிடுறீங்கன்ன்னு இந்த பதிவை பார்த்தாலே தெரியுது.

    ReplyDelete
    Replies
    1. அட, கரைகிட்டா பாய்ண்ட பிடிச்சிங்...வாழ்க்கையில் சந்தோசம் முக்கியமுங்கோ.... கருத்துக்கு நன்றிங்.

      Delete
  7. அனைவருக்கும் பயனுள்ள
    அருமையான
    இன்றைய நிலையில் தேவையான பதிவு
    பகிர்வுக்கு நன்றி.வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாஸ்தவம் தாங்க.

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்.

      Delete
  8. சிறப்பான பதிவு ! பகிர்வுக்கு நன்றி ! வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  9. மனைவியை சமாளிக்க...?

    தன்னம்பிக்கை...ஜாஸ்தி போல...:)

    ReplyDelete
    Replies
    1. சந்தோசமா வாழ்க்கையில் ஜெய்க்கனுமுன்னா தன்னம்பிக்கை வேணுமுங்க.

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்.

      Delete
  10. Replies
    1. உண்மைதானுங்கோ..... வாழ்க்கைக்கு

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்.

      Delete
  11. @NAAI-NAKKSMar 6, 2012 11:25 PM
    இது எல்லாம் பண்ணியும் ...வேலைக்கு ஆகலைனா????///////

    யோவ்...! அடி வாங்கிட்டே இருக்க வேண்டியதுதான்......கேள்விய பாரு..கேள்விய.....

    ReplyDelete
    Replies
    1. அதானே....

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்.

      Delete
  12. Replies
    1. என்ன மாம்ஸ் மூச்சி வாங்குதா??

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்.

      Delete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...