நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Thursday, October 18, 2012

ஒரு வயசு புள்ள

ஒரு வருஷம் ஒரு வருஷம் காத்திருந்தா கையில் ஒரு பாப்பா

முத்து முத்து பாப்பா
முத்தம் ஒண்ணு  கேப்பா
முத்து முத்து பாப்பா
முத்தம் ஒண்ணு  கேப்பா.........

(என்னவே இம்புட்டு சந்தோசமா இருக்கீரு)

வாங்க வாங்க
வணக்கம்

365 நாட்கள்  ஒரு வருஷம் - ஒரு வருசத்தில் 300 வோய்...

நீண்ட பதிவு (சுய சொரிதல் ச்சே சரிதம்)


கி பி 2000 ஆண்டு முதல்  எம்எஸ்என்/யாஹூ க்ரூப்புகளில் மட்டுமே வலய வந்தேன் ஆங்கிலத்தில், அதன்  தொடர்ச்சியாக  அப்படியே 2007 ல் தமிழ்  பதிவு பற்றி தெரிந்து   வாசிக்க தொடங்கினேன், 


(கி.பி.2007 முதல்)

(கி.பி.2008 முதல்)

(கி. பி. 2009 முதல்)

வாசிப்பதுடன் சரி வலைப்பூவில் எப்படி  பின்னுட்டம்  போடணும்  என்ற  ஞானம்  இல்லை போக  போக  தெரிந்து  கொண்டேன்.

கி பி 2010 தொடக்கத்தில் தான்  தமிழ் பதிவுலகில்  யாம் பின்னூட்டங்களின்  மூலமாக  பரிச்சியமானேன்.... (இங்கு வந்த பின் சிறுக சிறுக குரூப் பக்கம் போக முடியாமல் போனது இப்ப...தங்கில்ஸ்ல எய்தி எய்தி   இங்கிலீசு  பீஸ்  போச்சுங்க)

(கி. பி. 2010 முதல்)

'சித்தப்பு' (நான் செல்லமாக அழைப்பது) இவரின் பதிவின் மூலமாக கிடைத்தவர்கள் ஏராளம் அந்த வரிசையில் ஆரம்பத்தில் (ஏன்  இப்ப  வரையில்)  விரும்பி படிக்கும் பதிவுகளின்   பதிவர்கள்:

திரு. பன்னிக்குட்டி ராம்சாமி (இப்பல்லாம்  எப்போதாவது பதிவிடுகிறார்)

திரு.நாஞ்சில் மனோ ( இவரும் எப்போதாவது பதிவிடுகிறார்)

திரு. விக்கி, விக்கியின் அகட விகடங்கள்! (இவரும் எப்போதாவது பதிவிடுகிறார்)

திரு. செல்வா (இவரும் எப்போதாவது பதிவிடுகிறார்)

முக்கியமாக டெரர் கும்மி (இவர்களும்  எப்போதாவது பதிவிடுகிறார்கள்)

(அதாவது கடந்த ஆண்டை ஒப்பிடும் போது...........ஹி ஹி ஹி கொளுத்தி விட்டுடீயே...இனி பதிவா போட்டு தாக்கு வாய்ங்களோ......பாப்போம்)

திரு. நீருபன்  (இப்பவெல்லாம் இவரின் பதிவு  வாசிக்கவே  நேரமில்ல
ஆனா அவரின் புரட்சி எப் எம் என்னை முழுமையாக திருடி கொண்டது)

இப்படி தான் போய்கொண்டு இருந்தது,  2011 ல்  தனிமையின் கொடுமையில்   துவண்ட எனக்கு ஒரு ஆறுதலாக,  திடீரெண்டு ஞானம் வந்தது  சரி நாமும் பதிவுலகில் பூ மிதிப்போமுன்னு,....

முக்கியமா நான்  வாசிக்கும் பதிவர்களை   தெரிஞ்சவங்க லிஸ்ட் என தொகுத்து எனது வலை  பூவில்  வெளிட்டேன்  கூகுளின்  தயவால்.... 

(அதுக்கு காரணமே அந்த  கால  கட்டத்தில்  வீசிய  மணம்)  

சில  நாட்களுக்கு  பின்.... (ஏழரை ஆரம்பம்.. ....)

எனது  வலைப்பூவில்  கடந்த ஆண்டு 2011    அக்டோபர் 18 ம்     நாளில் தமிழ் பதிவுலகில் யாம்  சுட்ட முதல் பஜ்ஜி.   

மாதங்கள் கடந்து என்றாலும் அதுக்கு வந்த ஒரே பின்னூட்டம் மாப்ள ஜீவா கோவை நேரம்.
 
திரும்பி பார்க்கிறேன்... ஓர் ஆண்டில் அடேங்கப்பா.... இதோ இன்று 2012 அக்டோபர்  18 ம் நாள்

பதிவுகள் - 300

பஜ்ஜியை விரும்புவோர்கள் - 112

பின்னூட்டங்கள் - 2957 

ப்ரோபைல் வீவ்ஸ் - 7132

பேஜ் வீவ்ஸ் - 29298......

ஒரு வயசு (பக்கி பய)புள்ள

ஏராளமான நட்பு.. எதை  சொல்ல  எதை விட.... ஏதாவது  விடுபட்டு விட்டால் இருக்கவே இருக்கு மன்னிப்பு கேற்ற வேண்டியது தான்.

மனசாட்சியின் பஜ்ஜிக்கடை என்று இருந்ததை   இந்த பதிவு முதல்  மனசாட்சி என்று  மாற்றிக்கொண்டேன்.

அதன் பின் எல்லாமே, எனக்குன்னு ஒரு பாதை அந்த வழியில் பயணம்.....

எனது  பதிவுகளை திரட்டிகளில் குறிப்பாக இன்ட்லி  யுடான்ஸ்  தமிழ்வெளி   ஹோட்லின்க்ஸ்   மட்டுமே பதிவேற்றம் செய்துள்ளேன் அதன் பின் வெட்டி பிளாக்கர்ஸ்  என்று முகநூலில்  மாப்ள வீடு சுரேஷ் தொடங்கிய  குரூப்பிலும் இணைக்க தொடங்கினேன். (இப்ப நிறைய குரூப்'ஸ் முகநூலில்).

ஆங்..வலைசரத்தில் என்னை முதலில் அறிமுகம் செய்தவர் வீடு சுரேஷ்.

கடந்த ஏப்ரல் 2012 வலைசர ஆசிரியர் பொறுப்பேற்க நண்பர்  தமிழ்வாசி பிரகாஷ் அதை தொடர்ந்து   ஜூன் 2012 ஐய்யா சீனா அவர்களும்  அழைத்தார்கள்  நேரமின்மையை ஆசிரியர் பொறுப்பை ஏற்க இயலவில்லை.

தொடும் வரைதான் இமயம் தொட்டு விட்டால் இதயம் (எப்பவோ கிறுக்கியது 9ம் வகுப்பு என நினைவு) இந்த  இடத்துக்கு  பொருந்தும்.... வலை ஆசிரியர் பொறுப்பு வகிப்பதுக்காக சொல்றேன். ம். பாப்போம்

கடந்த ஜூன் 2012  கோவை பதிவர்கள் சந்திப்பு இன்னும் ஏராளமான நட்பு,
நட்பு வட்டம் பெரிதாகியது. மகிழ்ச்சியா இருக்கு. எனது வலைப்பூவில் தெரிஞ்சவங்க  வரிசை நாளுக்கு நாள்  நீளுகிறது மனசுக்கு இதமாக இருக்கு. 

தனிமையில் துவண்ட என்னை, தனிமையையும் இனிமையாக்கியது  பதிவுலக தமிழ் சொந்தங்களே.   

பதிவுலகில் இதுவரையில்:

நேரில் அறிமுகம் ஆனவர்கள், தொலைபேசி தொடர்பில் உள்ளவர்கள்,
மின்னஞ்சல் தொடர்பில் உள்ளவர்கள், சாட்டிங்  தொடர்பில் உள்ளவர்கள்,
(உங்களையெல்லாம்  தனித்தனியா உங்களின் வலைப்பூவுடன் சொல்லணும் ஆச, எண்ணம் ஆனா ராசா முடியலப்பா மன்னிச்.) மற்றும் பதிவின் மூலம் தொடர்பில் உள்ளவர்கள் ஆக எல்லோருக்கும்

கோடான கோடி நன்றிகள். 


டிஸ்கி: ஹா ஹா ஹா நோ விஸ்கி ,நோ பிராந்தி , நோ ரம்
               அடுத்த பதிவில் காக்டெயில் தான் கலக்கிடுவோம்ல.

   

Monday, October 15, 2012

மாற்றான் அல்ல மாற்றம்


வணக்கம்

டீ ஷர்ட்ஸ் வடிவமைப்புகள்


கேனத்தனமா இருக்கு..... ரசனைய சொன்னேன்



சிக்ஸ் பேக்காம்




ஜன்னல் வைத்த ஜாக்கெட் போடவான்னு பாடுனானுங்க....ஜன்னலுக்கு கீரிலே போட்டுடாங்க.. 




எம்மாடீ.....ஆத்.....தீ



கொஞ்சூண்டு ரசிக்கிற மாதிரி ஆனாலும்
செல்லாது செல்லாது...  


மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல

உங்கள் வாழ்க்கையில் என்றும் நல்ல  உறவுகளை  வைத்திருக்கவும். 

உன்னை நேசிக்க

உன்னை ஊக்குவிக்க

உன்னை தூண்டியெழுப்பக்கூடிய

உன்னை மேம்படுத்த மற்றும்

உன்னை சந்தோஷப்படுத்துவதற்காகவும் 

அதே நேரம்,,,,


மேலே சொல்லி  உள்ளவைகளை செய்ய இயலாத  உறவுகளை    தூக்கி  கடாசவும்/ஒதுக்கி வைக்கவும்.... அது  யாராக  இருப்பினும். (இது நம்ம  பாலிசிங்க)


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

டீ ஷர்ட்னா  இப்பூடீ இருக்கோணும்... 

இல்ல இப்படியும் இருக்கலாம்

ஜம்முன்னு...


எப்பூடீ



டிஸ்கி: அடுத்த பதிவு  சிறப்பு பதிவு...  அதற்கான வேலையில் மும்முரமாக......அப்ப இந்த பதிவு,  முந்தய பதிவுக்கும் வர இருக்கும் பதிவுக்கும் இடையில் இருக்கும்
இடத்தை நிரப்பத்தான்....ஹி ஹி ஹி


படங்கள் நன்றி  முகநூல் & கூகிள்      

Monday, October 8, 2012

உசுர சுண்டி இழுக்குறா..

வணக்கம்

இம்புட்டு நாளா அப்படி எனக்கு தோனலங்க ஏன்னா, பதிவுகள் மூலமே தொடர்புகள்  இருந்ததால்.

சமீபகாலத்தில் பதிவுலகில் நண்பர்கள் பலருடன் சாட்டிங்/ தொலைபேசி/ மின்னஞ்சல் தொடர்புக்கு பின் பதிவுலக  நண்பர்கள் எனது பெயர் என்ன? உங்களை எப்படி அழைப்பது என்று கேள்வி  கேட்டார்கள்.. அவர்களின் அன்பு அந்த நட்பு என் உசுரை  சுண்டி இழுத்தது. பின்ன இருக்காதா, எல்லோருக்கும் ஒரு பேரு இருக்க...  நானோ     வலைபூவின்  (ப்ளாக்) பேரில்.. அதானே நான் ஏன் என் பெயரை சொல்லாமல்  விட்டேன்... ஙே.

அந்த கேள்விக்கு விடையாக:

நண்பர்களே, சிறு வயது முதல் எனது பெற்றோர் அன்பாக செல்லமாக அழைத்த   முத்தரசு.....ஆம், இனி முதல் பதிவுலக நண்பர்களாலும் அவ்வாறே அழைக்க வேண்டுகிறேன்.  (அப்பாட ஒரு வழியா பேர  சொல்லிடான்டா...எலேய் நல்லா வருவல)

தெரியும் அடுத்து நீங்க என்ன எதிர்பாப்பிங்கன்னு...கேப்பிங்கன்னு......ம்  -எனது போட்டோ? வரும்... நேரம் வரும் போது அதுவும் வரும் -இப்பதானே  பாஸ்  பேர  சொல்லி  இருக்கோம்.

மனசாட்சி என்பது  ப்ளாகின் தலைப்பு -இன்னும்  சில  நாட்களுக்கு  எனது  பின்னூட்டங்கள் அதாங்க  உங்களின் வலைப்பூவில் நான்  இடும்  கருத்துக்களில்  எனது பெயருடன் அதாவது, முத்தரசு (மனசாட்சி) என்று இருக்கும் அப்புறம் முத்தரசு ஆக  இருக்கும்.

தொடர்ந்து உங்களின்  நல்ஆதரவுடன்......

புரிதலுக்கு நன்றி  

நேசமுடன்

கோவை முத்தரசு



ரொம்பவே ஒசந்தவங்க - வாழ்க வளமுடன்
 
வித்தியாசமான நிஜ ஜோடிகள்






வாழ்க பல்லாண்டுகள்



பார்ரா....., இப்பூடி கூட ?? 

இது கூட நல்லாத்தாம்யா இருக்க்கு 

மனபிராந்தி: காத்துவாக்கில & காதுல

நட்புக்கு மரணம் இல்லை

அப்படி இறந்தால்,

அது இயற்கையான மரணம் இல்லை

கொலை செய்யப்பட்டுள்ளது..

மனப்பாங்கு

அறியாமை

நான் என்னும் அகங்காரம்.

இவைகளால்.


விஸ்கி :  லொள்ளு & ஜொள்ளு

அச்சச்சோ அச்சச்சோ  கெளப்புறா கெளப்புறா

பழைய  நெனப்ப  கெளப்புறா

உசுப்புறா உசுப்புறா உசுர  சுண்டி இழுக்குறா

அச்சச்சோ அச்சச்சோ.... 




 நன்றி படங்கள் முகநூல் மற்றும் கூகிள்

Monday, October 1, 2012

என்ன்னா வெரைட்டி..


என்ன்னா வெரைட்டி...... எத்துன பிகரு ச்சே  கலரு

சேலையை சொன்னேன்....

இப்ப தான் புரிது எம்புட்டு நேரம் ஜவுளிக்கடையில வீணடிக்கும் காரணம்   









தொப்பையை குறைக்க இப்படியும் ஒரு வழி  இருக்கா..?!

இது தெரியாம பய புள்ளைக 

வாக்கிங், ஜாகிங், ரன்னிங்னு  நேரத்தை வீண் பண்ணிக்கிட்டு...

போங்கப்பு...  


மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல

படைப்பாளிகள் வாழ்க்கையின் விதிகள்

செய்ய சொன்னதை விட அதிகமாக செய்யவேண்டும்

புதிய விஷயங்களை முயற்சி செய்ய வேண்டும்  

என்ன தெரியுமோ அதை மற்றவர்களுக்கு கற்று கொடுக்க வேண்டும் 

வேலையில் புகுந்து விளையாட வேண்டும்

இடைவேளை எடுத்து கொள்ள  வேண்டும்  

மற்றவர்கள் உறங்கிக்கொண்டிருக்கும் போது வேலை செய்ய வேண்டும் 

முப்பொழுதும்  உருவாக்குதலில் சிந்திக்க வேண்டும்

சுயமா உத்வேகமா இருக்க வேண்டும் 

எதை செய்தாலும் நேசித்து செய்ய வேண்டும்  இல்லைனா விட்ரனும்.



விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு




மேற்காணும் இரு படங்களை மணிகணக்கா பாத்துட்டு இருந்தேன்
ஏன், எதுக்கு, என்ன மாயமோ, மந்திரமோ  ஒரு மண்ணும் புரியல (இடையிடையில மானே தேனே பொன்மானே போட்டுக்கங்...) ஆனா மீண்டும் மீண்டும் பாக்கணும் போல இருக்கு.




மனபிராந்தி மற்றும் விஸ்கி தொடர்ந்து, விரைவில் இன்னும்
ரண்டு வகை பஜ்ஜிகள் அறிமுகம்....


படங்கள் நன்றி முகநூல் மற்றும் கூகிள்