மாற்று கருத்துக்கள் வரவேற்க படுகிறது - சீரியசாக தயவு கூர்ந்து எடுத்துக்கொள்ள (கொல்ல) வேண்டாம்.
- பெண் தான் எப்பவுமே விதிகள் அமைப்பது.
- விதிகள் இடத்துக்கு இடம் மாறும் எந்த வித முன் அறிவிப்பும் இன்றி.
- எல்லா விதிகளும் ஆண்களுக்கு தெரிந்து இருக்கோணும் என்று அவசியம் இல்லை
- ஆணுக்கு விதிகள் தெரிந்து விட்டதோ என சிறு சந்தேகம் ஏற்பட்டாலோ, விதிகள் மாற்றப்படலாம் அல்லது திருத்தபடலாம்.
- பெண் பக்கம் தவறே கிடையாது.
- பெண் பக்கம் தவறு இருப்பின், அது சரியாக புரிந்து கொள்ளவில்லை என்ற அடிப்படையில் தான் பார்க்கப்படும்.
- விதி எண் 6 ஏற்று கொண்டால், ஆண் உடனடியாக மன்னிப்பு கேட்டு ஒப்புக்கொள்ளவேண்டும்.
- பெண் எந்த நிமிடத்திலும் தங்களின் மனநிலையை மாற்றிக்கொள்ளமுடியும்.
- ஆண்கள் எந்த சூழ்நிலையிலும் மனநிலையை மாற்றக்கூடாது அப்படி மாற்றனும் என்றால் பெண்ணிடம் முன் அனுமதி பெறல் அவசியம்
- பெண் எந்த நேரத்திலும் கோபம் அல்லது கவலையாகவும் இருக்க உரிமை உண்டு.
- பெண் கோபம் அல்லது சோர்ந்து போய் இருக்க விரும்புகிறார் ஆண் அமைதியாக இருக்க வேண்டும்.
- ஆண் கோபம் அல்லது கவலையாக இருக்க விரும்புகிறார் என்பதை பெண்ணிடம் எந்த சூழ்நிலையிலும் தெரியப்படுத்த வேண்டும்.
- விதிகள் ஆவணப்படுத்த முயற்சி செய்யவில்லை எனில் உடலில் காயம் உண்டாக்கும் விளைவுகளை ஏற்படுத்தலாம்.
டிஸ்கி 1 : எப்ப்ப்பூடீ.....உங்களுக்கு தெரிந்த விதிகள் ஏதாவது இருந்தா சொல்லுங்க... தெரிஞ்சிக்குவோமே..