நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Sunday, May 20, 2012

நண்பன் Vs சிறந்த நண்பன்

நண்பன்: நீ அழ பார்த்திருப்பான்

சிறந்த நண்பன்: உன் கண்ணீர் துளிகள் விழுவதோ அவனது தோள்களிலே 


 நண்பன்: உன்  பெற்றோர்கள்  பெயர்கள் தெரியாது.

சிறந்த நண்பன்: உனது  முகவரி, தொலைபேசி எண்கள் எல்லாம் அவன் மனதிலே .


 நண்பன்: உன்  விருந்திற்கு மது  பாட்டில் கொண்டு வருவான் .

சிறந்த நண்பன்: ஆரம்பத்திலேயே வந்து  உன்னுடன்  சமைக்கவும்,  சுத்தம் பண்ணவும்  உதவியாள இருப்பான்


நண்பன்: தூங்க சென்ற பிறகு உனது தொலைபேசி அழைப்பை எடுப்பதில்லை  அதை வெறுக்கிறான்.

சிறந்த நண்பன்: தொலைபேசியில் அழைக்க ஏன் இவ்வளவு கால தாமதம் ஏன் கேட்பான்  

 நண்பன்: உன்  பிரச்சினைகளை மட்டும் கேட்பான் .

 சிறந்த நண்பன்:  உன் பிரச்சினைகளில் உங்களுக்கு உதவ முற்படுவான்

நண்பன்: உன் காதல் வரலாறு பற்றி வியப்படைவார் .

 சிறந்த நண்பன்: அது பற்றி எச்சரிக்கை செய்வான் .


நண்பன்: வருகையின்  போது, ஒரு விருந்தினர் போல செயல்படுவார் .

சிறந்த நண்பன்: உன்  வீட்டு குளிர்சாதன பெட்டியை திறந்து  தேவையானதை.... தனக்கு தானே  செயல்படுவான்


நண்பன்: நீ எப்போதும் அவனுடன்  இருப்பதையே எதிர்பார்ப்பான்

சிறந்த நண்பன்: எப்போதும் உன்னுடன்  இருக்க வேண்டும் என்று நினைப்பான் !


நண்பன்: நீ ஒரு எதிர் வாதம்/சண்டை  செய்தாலே உன் நட்பு போதும் என்று நினைப்பார்கள்

சிறந்த நண்பன்: உன்னுடன் சண்டை/எதிர்வாதம் இல்லை என்றால் அது ஒரு நட்பாகவே இருக்காது என கருதுவார்கள். 



விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

கண்ணால்  கவிதை  சொல்லும்   மஞ்சள் ஆடைக்காரி