நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Tuesday, August 26, 2014

அந்த ஏழு இரவுகள்

திங்கள் இரவு
 
 
மனைவி : இன்னைக்கு என்ன குடிச்சிட்டு வந்தீங்களா? 

கணவன் : ஆமான்டா செல்லம் ஆபிஸ்ல வெளிநாட்டு வாடிக்கையாளருடன் சந்திப்பு அப்படியே குடிக்க வேண்டியதா போச்சி


  
செவ்வாய் இரவு
மனைவி: என்ன இன்னைக்கும் குடிச்சிட்டு வர்றீங்களே
 
கணவன் : ஆமான்டா செல்லம் நண்பனுக்கு நிச்சயம் பண்ணியதுக்கு பார்ட்டி கொடுத்தான் அதான் அப்படியே தவிர்க்க முடியல...


 
புதன் இரவு
 

மனைவி: இன்னைக்கும் குடிச்சிட்டு வர்றீங்க
 
கணவன் : ஒரு நண்பனுக்கு டிவேர்ஸ்...மனஉளைச்சல் அவனை ஆசுவாச படுத்தி அப்படியே....

 
 
வியாழன் இரவு
 
மனைவி: இன்னைக்குமா..... இப்ப எந்த நண்பனுக்கு டிவேர்ஸ் ஆச்சு
 
கணவன் : டிவோர்ஸ் இல்லமா...ஆபிஸ்ல வேலை பளு ஒரே டென்சன் அதனால...


 
வெள்ளி இரவு
 

மனைவி : இன்னைக்கு ஏங்..
 
கணவன் : செவ்வாகிழம நண்பனுக்கு நிச்சயம் பண்ணாங்களா இன்னைக்கு அவனுக்கு கல்யாணம்,,, மகிழ்ச்சியில் பார்ட்டில கலந்துகிட்டு குடிச்சி...


 
சனி இரவு
 

மனைவி : ம்ம்ம்...இப்ப
 
கணவன் : பழைய நண்பனை சந்தித்தேன்..என்னை விடாபிடியாக டிஸ்கோவுக்கு அழைத்து சென்று வேண்டாம் வேண்டாம் என்று மறுக்க...முடியாமல் குடிச்சி...


 
ஞாயிறு இரவு

மனைவி : சரி இன்னைக்கு என்னாச்சி

கணவன் : என்னடா இது மனுசன்  ஒரு நாளாவது...... எங் இஸ்ட்படி குடிக்க கூடாதா.............ச்சே என்ன மாதிரி சமூகத்துல வாழுறோம் 


&&&


மனைவி : ஏங்க...ஏனுங்க தோட்டத்துல கூடமாட ஒத்தாச பண்ணுங்களேன் ?
 
கணவன் : என்ன நெனச்சுட்டு இருக்கே ஓங் மனசுல நாங் என்ன தோட்டகாரனா..?
 
மனைவி :என்னங்க இந்த கதவுல கைப்பிடி ஒடஞ்சுடுசி மாட்டி கொடுங்களேன்?
 
கணவன் : என்ன நீயீ, என்னைய தச்சுவேலை செய்யரவன் மாதிரியா தெரியுது ஒனக்கு
 
மாலையில் ஊர்சுற்றி விட்டு வீடு திரும்பிய கணவன்....  எல்லாமே சரி செய்யப்பட்டு இருப்பதை கண்டு 
 
கணவன் : ஏய்....என்னாதிது ஆரூ செய்தது இந்த வேலை எல்லாம்
 
மனைவி : பக்கத்து வீட்டுகாரார்....ஆனா பாருங்க ஒரு  கண்டிசன் போட்டாரு
 
முட்ட புரோட்டா அல்லது முத்தம் வேணும்னு கேட்டாரு 
 
கணவன் : ஹா ஹா எனக்கு நிச்சயமா தெரியும் முட்ட புரோட்டா கொடுத்து இருப்பேன்னு
 
மனைவி : என்ன நெனசிகிட்டு இருக்கீக என்னைய பத்தி...நா என்ன புரோட்டா கடையா வச்சிருக்கேன்..
 
கணவன் : ங்..ஞே 
 
 
  

Tuesday, June 24, 2014

ப்பா.....! எ'மது' பலமும் பலவீனமும் ஆளுமையும்...

பத்து கேள்விகள்  எ'மது'  பதில்கள்
 
 
இந்த களத்தில் எம்மை எறக்கிவிட்ட ச்சே கோத்துவிட்ட தோழர் இல்யாஸ்.....வாழ்க வளமுடன்.
 
 
1. உங்களுடைய 100ஆவது பிறந்தநாளை எப்படிக்கொண்டாட விரும்புகிறீர்கள்? 
 
எ'மது'  ஆரோக்கியத்தின் மீது கொண்ட நம்பிக்கைக்கு நன்றிகள் - ஒங்களுடன் சேர்ந்து கொண்டாடவே விருப்பம்.
 
 
2. என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?
 
தெனம் தெனம் புதுசு புதுசா கத்துக்கிட்டுதான்  இருக்கேன் - (இந்தா, 10 கேள்வி 10 பதில்கள் புதுசு தானே)
 
 
3. கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?
 
 
மணி நேரத்துக்கு  முன்னாடி - கடந்த 21.9.2013  நீச்சல் குளத்தில் போட்டா எடுத்தது அதை இன்று காண நேர்ந்து அதை பேஸ்புக்குல பதிவு பண்ணுனேன்.
 
 
4.  24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?
 
 ஹிக்கும் அப்படி ஒரு நெலமை வராதுங்க 
 
 
5.  உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன?
 
(எனது மகளுக்கும் - மருமகளுக்கும்) பொறந்த வீட்டு குல  பெருமையை பீத்திக்காம மனதில் நிறுத்தி, புகுந்த வீட்டு குல பெருமையை நிலைநாட்டு - வாழ்க வளமுடன்.
 

 
6. உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும்
என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?
 
எல்லாப்பிரச்சனையும்.....

 
7. நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?
 
சூழ்நிலை, காரண காரியங்களை பொருத்து மாறுபடும்
 

 
8. உங்களைப் பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?
 
பரப்புவோரின்  இயலாமை எண்ணி வருந்தும் அதே வேளையில்......,
எம்மை பிரபலபடுத்தும் அந்த நல்லவர்களை மனதார வாழ்த்துவேனுங்க
 
 
9. உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?

 
எமது நண்பர்......ம்.,    நண்பருக்கு நண்பர் எமது சொல் மாறுபடும்
 

 
10. உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?
 
சமையல் செய்வேன்

ப்பா.....! எ'மது' பலமும் பலவீனமும் ஆளுமையும் யாமே

Monday, March 17, 2014

கதையல்ல.....நாவல்

நக்ஸ் : என்னப்பா இது?

ஆக்ஸ் : ஒ... இதா நா எழுதிய 500 பக்க நாவல்

நக்ஸ் : என்னாது நாவலா அதுவும் 500 பக்கமா? அப்படி என்னய்யா எழுதி இருக்கீக?

ஆக்ஸ் : மொத பக்கத்தில்.....ஒரு ராஜா குதிரையில் ஏறி அமர்ந்து அடர்ந்த வனபகுதியை நோக்கி பயணமாகிறார்

கடைசி பக்கத்தில்.... அடர்ந்த வனபகுதியை சென்று அடைகிறார்.

நக்ஸ் : அட பார்ரா செரியி அந்த 498 பக்கத்துல என்ன எழுதி இருக்கீக?

ஆக்ஸ் : டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக்...

நக்ஸ் : ஆமா இந்த கதைய....

ஆக்ஸ் : யோவ் கதை அல்ல நாவல்

நக்ஸ் : செரி செரியி நாவல்.....ஆரு வாங்கி படிப்பா

ஆக்ஸ் : பேஸ்புக்ல...ப்ளாக்ல லிங்க் கொடுத்தேன் வையுங்க.....என்னைய மாதிரி உள்ளவங்க கண்டிப்பா படிப்பாங்க

Friday, March 7, 2014

வெவரமான புள்ள


வணக்கம்  

பையன் : உன் பெயர் என்ன?



பொண்ணு : ஏன் சொல்லணும், நீ யாருன்னே தெரியாது..
பையன் :சொல்ல மாட்டாய சரி விடு, என்னுடைய 
மெர்சிடிஸ் காருல பைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு 
கூட்டிட்டு போகலாமேன்னு ..


பொண்ணு: பேரு க்ஸ் ஒய், எம்காம், டவுன் காலேஜ்
காலை 8 முதல் 1 வரை, வெள்ளிகிழமை காலை 8 முதல் 12 வரை  ஞாயறு விடுமுறை
காலேஜ் வரும் போது அப்பா அழைத்து வருவார் - திரும்ப போகும் போது தனியாகத்தான்...

ஏ புள்ள இந்தா நில்லு நில்லுன்றேன்ல
ஏங்...மச்சாங்
அட இம்புட்டு வெரசா எங்க புள்ள கெளம்பிட்ட
ஹிக்கும் தெரியாதாக்கும்  
செரி ஆருபுல்ல இது 
மறந்திடீங்களா மச்சாங்  என்ர க்காபொண்ணு 
ஆரு.... பொம்மியா....
ஏங்கன்னு,....ஒன்ர வயசென்ன 
ஆங்..அஸ்க்கு புஸ்க்கு
இந்தா சித்தப்பு கெக்குருராருல்ல ஒழுக்க மருவாதையா சொல்லோனோம்
அட சொல்லு கண்ணு 
14
பதினாலா....ம்  பெரிய புள்.....
ஆங்.. என்ர வுட்டுலதேன்
ஸ்..ஸ்கூல்ல பன்னெண்டு
பஸ்சுல பத்து
ரயில் பொட்டில ஏலாக்கும் 
அட வெவரம்தென் போ 
ஆங்... பேஸ்பொக்குல பதிநெட்டாக்கும்...

Thursday, February 6, 2014

காமத்தோட தொல்லை


 வணக்கம் 



அன்று

என்ன மாப்ளே சௌக்கியமா?

நல்ல இருக்கேன் மாம்ஸ்

ரொம்ப நாளா ஆளே காணோம்? அம்பூட் பிஸி...

ம்ம்......

ம்ஹிம்.....மாப்ளே உம்மகிட்டு கேட்டனுமே..... காமத்தை பத்தி......


(மைண்ட் வாய்ஸ்...என்னாதிது மாம்ஸ் நம்மகிட்ட காமத்த பத்தி கேக்காரே) என்ன மாம்ஸ் கேட்டீங்க

மாப்ளே இந்த காமத்தை பத்தி சொல்லும்வோய்....

ஹி ஹி ஹி ஹி மாம்ஸ் அத எல்லாம் தன்னால வரணும் சொல்லி வருவதில்லை அது எப்படின்னா?.....


யோவ் மாப்ளே நிறுத்தும் நா என்ன கேட்டேன் நீர் என்னவோய் சொல்றீரு

மாம்ஸ் நீங்க என்ன கேட்டீங்க

காமத்தை பத்தி...

அதேன் நா சொல்றேன்

யோவ் நா கேட்டது உம்ம பிரண்டு காமத்தை  பத்தி

யு மீன் மிஸ்டர் காமத் (kamath) ......

ம்ம்...

ஙே




இன்று

என்ன மாம்ஸ் எப்படி இருக்கீக ?

நல்ல இருக்கேன் மாப்ளே

ரொம்ப நாளு ஆச்சி இந்த பக்கம் வரவே இல்ல 

கொஞ்சம் வேல 

ஏது பேஸ்புக்லேயா  

ஹி ஹி ஹி ஹி

மாம்ஸ் உங்க கிட்ட கொஞ்சம் விவரம்  வேணுமே  காமத்தை பத்தி......


(மைண்ட் வாய்ஸ்...என்னாதிது மாப்ளே நம்பளே கலாய்கிறாரோ....உசாரா டீல் பண்ணனும்) என்ன மாப்ளே கேட்டீங்க

மாம்ஸ் இந்த காமத்தை பத்தி சொல்லுங்களேன்....

ம்ஹிம்.... மாப்ளே, காமத்தை பத்தி சொல்ல என்ன இருக்கு ரோம்ப  நல்லவரு நேர்மையானவர் சுருக்கமா என்னைய மாதி.....

யோவ் மாம்ஸ் ஒரு நிமிஷம் உம்ம பிரண்டை பத்தி கேட்கல 

மாப்ளே பின்ன என்னா நீங்க கேட்டீங்க...

காமத்தை பத்தி...

அதேன் நா சொல்றேன்

யோவ் நா கேட்டது காமத்தை  

யு மீன் காமம்......

ம்..

ஙே


நாளை
யாரு எல்லாம் - எப்படி எல்லாம் கேக்க போறாங்களோ......அலர்ட்டா இருக்கோணும் 
 திருவாளர் காமத் (Mr. Kamadh)  அப்படிங்குற பேருல எனக்கு ஒரு பிரண்டு - இப்படி பொரட்டி பொரட்டி வாங்குரேனே - ஏங் எனக்கு மட்டும் இப்படி - இந்த காமத்தோட தொல்லையப்பா.
(காமம் ச்சேசே காமத் பிளிஸ்  மன்னிச்சு)